சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள்
நடைபெறுவதால் இரவுநேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. “நாளை இரவு 9.55, 10.10, 10.40, 11.15 மணிக்கு தாம்பரம் கடற்கரை இடையேயான மின்சார ரயில் பகுதிநேரமாக ரத்து; சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் நாளை இரவு -10.30, 11, 11.20, 11.40, 11.59 மணிக்கு பகுதிநேரமாக ரத்து; செங்கல்பட்டு சென்னை கடற்கரை மின்சார ரயில் நாளை இரவு 10.10, 11 மணிக்கு பகுதிநேரமாக ரத்து; சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில் நாளை இரவு 10.45க்கு கடற்கரை எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து; திருமால்பூர் சென்னை கடற்கரை ரயில் நாளை இரவு 8 மணிக்கு எழும்பூர் கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து” என அறிவிக்கப்பட்டுள்ளது.