Sunday, July 14, 2024
Home » சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 43.59% நீர் இருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 43.59% நீர் இருப்பு

by Neethimaan


சென்னை: புழல் ஏரிக்கு வினாடிக்கு 360 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,932 மில்லியன் கன அடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 180 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 122 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி உள்ள கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 313 மில்லியன் கன அடியாக உள்ளது.

சேழவரம் ஏரிக்கு நேற்று 43 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 77 கன அடியாக அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 43.59% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 5.125 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 45.87%, புழல் – 88.85%, பூண்டி -2.66%, சோழவரம் 11.28%, கண்ணன்கோட்டை -62.6% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 645 கனஅடியாக இருந்த நீர் வரத்து இன்று 205 கன அடியாக சரிந்துள்ளது.

3645 மி. கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1672 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 109 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நீர்இருப்பு 86 மில்லியன் கன அடியாக உள்ளது. மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 30 கனஅடி நீர்வரத்து புழல் ஏரிக்கு 50 கனஅடி நீர் திறக்கபப்டுகிறது.

You may also like

Leave a Comment

five × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi