சென்னை: சென்னையில் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தரக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி நபருக்கு சொந்தமான நாய் கடித்ததற்கு அரசை பொறுப்பாக்க முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். ஆயிரம் விளக்கு பூங்காவில் நாய் கடித்ததில் சிறுமிக்கு உடலின் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது.