சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் “தொழில் முனைவோர்- டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ தொடர்பான வகுப்புப் நேரடிப் பயிற்சியானது வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இந் நிறுவன கட்டிட வளாகத்தினுள் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்க: 8668100181, 9841336033, 044-22252081, 82 முன்பதிவு செய்வது அவசியம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.