சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, அண்ணா நகரில் பரவலாக மழை பெய்கிறது. கே.கே.நகர், அண்ணா சாலை, அடையாறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்க்கிறது. கடற்கரைச் சாலையில் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.