சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே தென்மகா தேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரத்தில் உள்ள பர்வத மலையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மல்லிகா அர்ஜுனேஸ்வரர் பிரம்மராம்பிகை அம்பாள் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் சென்னை அடுத்த பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கார்பெண்டர் முருகேசன்(45), நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட 15 பேர் பர்வத மலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். இரவில் அனைவரும் மலையேறிச்சென்றனர். மலையின் உச்சியில் சென்றபோது முருகேசனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடன் சென்றவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும், மூச்சு திணறல் அதிகரித்து அங்கேயே முருகேசன் பரிதாபமாக பலியானார்.