சென்னை: சென்னையில் எப்போது இணைந்து சைக்கிள் ஓட்டலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவிவரும் நிலையில் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிகாகோவில் சைக்கிள் ஓட்டினார்.