சென்னை : சென்னை மாநகராட்சியில் 1913 எண்ணில் மக்கள் பதிவு செய்யும் புகார்களுக்கு தீர்வு காணாமல் முடித்துவைத்தால் மாநகராட்சி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகராட்சி சேவை குறைபாடுகளை தெரிவிக்க 1913 என்ற எண்ணுக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. ஆனால் புகாருக்கு தீர்வு காணாமல் புகாரை சரி செய்துவிட்டதாக பதிவிட்டு முடித்துவைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.