தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும் சென்னை வரும் மக்களுக்கு முதலில் வரும் பிரச்னை எந்த பஸ்ஸை பிடித்து எப்படிச் செல்வது. மேலும் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களுக்கு ஏற்கனவே சரியான செயலிகள் இருக்கும் பட்சத்தில் இந்த பேருந்துகளுக்கு ஒரு செயலி இருப்பின் உதவியாக இருக்கும் என பலரும் யோசித்திருப்போம். அதற்குதான் உதவுகிறது சென்னை சிட்டி பஸ் (MTC) (Chennai City Bus – Find Bus No) செயலி. இதில் எந்த ஏரியாவிலிருந்து எந்த ஏரியாவிற்குச் செல்ல வேண்டுமோ அந்த பெயரை From மற்றும் To வில் டைப் செய்தால் பேருந்துகளின் பட்டியல் வரும். எந்த எண் பேருந்து எந்த நேரத்தில் புறப்படும், மேலும் அடுத்த பேருந்துகள் வருகை நேரங்கள், அதன் டிக்கெட் கட்டணங்கள் விவரங்கள் என அனைத்தும் இந்தச் செயலியில் பெறலாம். மற்ற ஊர்களிலும் இந்தச் சேவையைக் கொண்டுவரும் முயற்சிகளும் நடந்துவருகின்றன.