சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. ஒடிசாவிலிருந்து நேற்றிரவு குழந்தையுடன் வந்த நந்தினி கண்காகர் – லங்கேஸ்வர் தம்பதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே உறங்கிய நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் குழந்தை காணாமல் போனது. குழந்தையை கடத்திய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பரபாஸ் மெண்டல், நமீதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.