சென்னை : உலகில் கார் பந்தயம் நடைபெறும் 14 இடங்களில் சென்னை நகரும் தற்போது இணைந்துள்ளது. பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதை ஒட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேக்தாத் ரெட்டி பேட்டி அளித்தார். அப்போது, எதிர்காலத்தில் கார் பந்தயத்துக்கான ஆர்வம் சென்னையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். பார்முலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி நாளை தொடங்கி வைக்கிறார்.