சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்.19, 20, 25, 26, 27, 28, 30, 31 மற்றும் நவ.1, 2, 3-ல் -இரவு 11.59-க்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து இரவு 11.40-க்கு சென்னை கடற்கரை புறப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அக்.19, 20, 25, 26, 27, 28, 30, 31 மற்றும் நவ.1, 2, 3-ல் இரவு 11.40-க்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59-க்கு தாம்பரம் புறப்படும் மின்சார ரயில் அக்.29-ல் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து இரவு 11.35-க்கு சென்னை கடற்கரை புறப்படும் மின்சார ரயில் அக்.29-ல் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.