சென்னை: சென்னை அடுத்த ஆவடியில் தடம் புரண்ட ரயிலின் பெட்டியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் தடம் புரண்டது. தடம் புரண்ட ரயிலின் 3 பெட்டிகள் மீட்கப்பட்ட நிலையில் 4வது பெட்டியை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மீட்பு பணியால் சென்னை – திருவள்ளூர் மார்க்கத்தில் 8 மணி நேரமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.