சென்னை: சென்னையில் பணியின்போது உயிரிழந்த காவல் உதவி ஆணையர் சிவகுமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆணையராக பணியாற்றிவந்த சிவகுமார் பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்தார். பாதுகாப்பு பணியில் இருந்தபோது மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிவகுமார் உயிரிழந்தார்.