சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு தாளுக்கான தேர்வு கட்டணம் ரூ.150ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.225ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ரூ.300ஆக இருந்த தேர்வு கட்டணம் தற்போது ரூ.450ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.1000லிருந்து ரூ.1500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.