சென்னை: சென்னை விமான நிலையம் அருகே கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக தரையிறங்க முடியாமல் 5 விமானங்கள் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.