சென்னை: வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்புடன் காணப்பட்டது. கோடைகால விடுமுறையையொட்டி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் குடுமத்தினருடன் சென்றனர். இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், வெளியூர்களுக்கு சென்ற பொதுமக்கள் நேற்று அதிகாலை முதலே சென்னைக்கு வரத்தொடங்கினர். குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பயணிகள் ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட்கள் கிடைக்காத நிலையில், நேற்றைய தினம் ஏராளமானோர் விமானங்களில் பயணம் செய்து சென்னை வந்தடைந்தனர்.இதனால் சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதியது. மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை ஆகிய மாநகரங்களில் இருந்து ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் பலமடங்கு டிக்கெட் கட்டணம் செலுத்தி விமானம் மூலமாக சென்னை வந்தனர்.
பலமடங்கு கட்டணம் உயர்வு
இடம் சாதாரண கட்டணம் நேற்றைய
கட்டணம்
மதுரை – சென்னை ரூ.4,542 ரூ.18,127
தூத்துக்குடி – சென்னை ரூ.4,214 ரூ.17,401
திருச்சி – சென்னை ரூ.2,334 ரூ.9,164
கோவை – சென்னை ரூ.3,550 ரூ.6,475