சென்னை: சென்னையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 6 இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காத்திருப்போர் பட்டியல்களில் இருந்த சிவகலை ஐஸ்அவுஸ் குற்றப்பிரிவுக்கும், ராமசாமி அயனாவரம் குற்றப்பிரிவுக்கும், சிவமணி ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவுக்கும், பொன்சித்ரா ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், சுமதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், பாரதி பூக்கடை குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 6 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு
0