சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும், விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை தனிப்படையினர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில்
சிங்கப்பூரில் இருந்து 3 விமானங்களில் வந்த பயணிகளில், 25 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதை அடுத்து அவர்களை வெளியில் அனுப்பாமல் நிறுத்தி வைத்து விசாரித்ததோடு, அவர்கள் உடமைகளிலும் சோதனையிடப்பட்டது. அப்போது 3 விமானங்களின் பயணிகளிடம் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 25 பயணிகளின் உடைமைகளில் இருந்து தங்கக் கட்டிகள், தங்கப் பசைகள், தங்கச் செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து ரூ.15 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 8 பெண்கள் உள்பட 25 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கத்தை கடத்தி வந்த 8 பெண்கள் உள்பட 25 பயணிகளை கைது செய்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.