Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தி.நகரில் செயல்படும் ஆன்லைன் விற்பனை குடோனில் தீவிபத்து

சென்னை, ஏப்.8: சென்னை மாம்பலம் மூசா தெருவையில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பிரபல ஆன்லைன் நிறுவனமான ‘பிளிங்கிட்’ நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் இயங்கி வருகிறது.  இந்த குடோனில் நாள்தோறும் விற்பனை செய்ய உள்ள மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைத்து, பின்னர் ஆர்டரின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்நிலையில் ஆர்டரின் பேரில் பொருட்களை பரித்து அனுப்பும் பணியில் நேற்று அதிகாலையில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென குடோனில் கரும்புகையுடம் தீ பரவியது. இதை பார்த்த ஊழியர்கள் குடோனில் இருந்து அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். தகவலறிந்து தி.நகர் மற்றும் அசோக் நகர் பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆனால், அதற்குள் குடோனில் வைத்திருந்த மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் எரிந்து நாசமானது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடோனில் உள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.