Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னை, மே 1: சென்னைமெட்ரோ நிர்வாகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு அட்டவணைப்படி ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை, 7 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இதன் மூலம் வேலை மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக பயணம் செய்பவர்கள் எளிதாகவும் விரைவாகவும் பயணிக்க முடியும். அதேபோல், காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும். மேலும், இரவு நேர பயணிகளுக்காக, இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ சேவை வழங்கப்படும். இந்த மூலம் பயணிகள் நெரிசலை கட்டுப்படுத்துவதோடு, பாதுகாப்பான சேவையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.