சென்னை: சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கபடுகிறது. மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.