சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து155 கனஅடியில் இருந்து 317 கனஅடியாக அதிகரிப்பு. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2411 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம்.
1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 62 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 19 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 302 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 50 கனஅடியாக உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 35.37% நீர் இருப்பு உள்ளது.செம்பரம்பாக்கம் – 35.53%, புழல் – 73.06%, பூண்டி – 2.72%, சோழவரம் – 5.73%, கண்ணன்கோட்டை – 60.4% சதவீதம் உள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் 300 கனஅடி நீர்வரத்து வர தொடங்கியது.3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர் இருப்பு 1295 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.