Saturday, February 24, 2024
Home » சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by MuthuKumar

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்றும், நாளையும் இந்த அயலகத் தமிழர் தின விழா நடைபெறுகிறது. 3-ம் ஆண்டாக தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடைபெறுகிறது.

உலக தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டும், அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, அவர்களுக்கான நலதிட்டங்களும் செயல்படுத்த வேண்டும், மேலும் அவர்கள் தமிழர்களுக்கான பங்களிப்பையும் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் அயலக தமிழர் தினம் 2024 இன்று சென்னை நந்தப்பக்கத்தில் உள்ள வர்த்தகமையத்தில் 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

தற்போது இதற்கான கண்காட்சி அரங்கம் ஒன்று அமைக்கபட்டுள்ளது. அதில் வாரியம் அயலக தமிழர் ஆணையரகம், அரசு எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை காட்சிபடுத்தகூடிய விதமாகவும், பல்வேறு நாடுகளில் இருக்க கூடிய தமிழ் சங்கங்களின் அரங்குகள், இந்து சமய அறநிலையத்துறையின் அரங்கு, தொல்லியல் அரங்கு, பள்ளிகல்விதுறையின் அரங்கு ஆகிய அனைத்து விதமான அரங்குகளையும் அவர்களுக்கு அறிமுகபடுத்த கூடிய வகையில் அந்த கண்காட்சியை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்துள்ள தமிழர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை, மலேசியா, சிங்கபூர், லண்டன், கனடா உள்பட பல்வேறு நாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவானது இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

You may also like

Leave a Comment

two × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi