சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் மற்றும் பாண்டிச்சேரி மாநில அமைப்பாளர் ஆலோசனை கூட்டம் 26ம்தேதி (நாளை) காலை 9.30 மணியளவில் சென்னை ஆர்.கே. சாலையில் உள்ள ஓட்டல் உட்லண்ட்ஸில் நடக்கிறது. கூட்டத்திற்கு திமுக துணைப்பொதுச்செயலாளரும்- மாணவர் அணியின் பொறுப்பாளருமாகிய ஆ.ராசா எம்.பி தலைமை வகிக்கிறார்.
துணைச்செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் இரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், தமிழ்கா. அமுதர சன், பி.எம்.ஆனந்த், வி.ஜி. கோகுல், பூர்ணசங்கீதா சின்னமுத்து, ஜெ.வீர மணி, ஜெ.ராமகிருஷ்ணன் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் அனைத்து மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் மற்றும் பாண்டிச்சேரி மாநில அமைப்பாளர் மட்டும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள், மாணவரணியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.