சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102க்கு விற்பனை செய்யப்படுகிறது.