சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் ஜவுளிக்கடையில் துணிவாங்குவது போல் நடித்து ஆடைகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோசம், ராம் துளசி ஆகியோர் கைதாகினர். 2 பெண்களிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.