சென்னை: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் டாஸ்மாக் பார் டெண்டர் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெண்டரை எதிர்த்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை அறிவிக்கக் கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பார்களில் காலி பாட்டில்களை சேகரிக்கவும், தின்பண்டங்கள் விற்கவும் உரிமம் வழங்க வெளியிடப்பட்ட டெண்டர் நிபந்தனைகளை எதிர்த்த வழக்குகள் அக்டோபர் 31க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.