சென்னை: சென்னையில் மாணவர்கள், பெண்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து மாநகர போக்குவரத்துக்கழகம் பரிசீலனை செய்து வருகிறது. சென்னையில் மாணவர்கள், பெண்கள் என மொத்தம் 40 லட்சம் பேர் தினசரி பேருந்துகளில் பயணிக்கின்றனர். பள்ளி, கல்லூரி, அலுவலக நேரங்களில் மாநகர பேருந்துகளில் கூட்டம் அலைமோதுவதால் மாணவர்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு 30 சிறப்பு பேருந்துகள், மாணவர்கள் வசதிக்காக 50 பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
+
Advertisement
