சென்னை: சென்னை – செங்கோட்டை தடத்தில் செல்லும் ரயில்கள் இயக்கம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நடக்கும் பணிகளால் ரயில் ரத்து, பகுதியாக ரத்து, வழித்தட மாற்றங்கள் விவரம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட்.15-ல் சென்னை செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் விழுப்புரத்துக்கு 30 நிமிடம் தாமதமாக செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.