சென்னை: சென்னையில் 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூரில் சிலைகளை கரைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தது.