சென்னை: சென்னை மண்டலத்தில் சார்பதிவாளர்கள் டெபுடேஷன் முறையில் நியமனம் செய்யப்படுவதாக பதிவுத்துறை விளக்கமளித்துள்ளது. பல ஆண்டுகளாக சென்னையில் பணியாற்றி வந்த சார்பதிவாளர்கள் மீது புகார்கள் வந்ததால் நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டனர். பொதுமக்கள் நலன் கருதி வெளிப்படையான முறையில் சார்பதிவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் பதிவுத்துறை விளக்கமளித்து.