சென்னையில் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் கத்தியால் குத்தியதில் கல்லூரி மாணவி படுகாயமடைந்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் ஏழு கிணறு தெருவில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தப்பியோட்டினார். கத்திக் குத்தில் காயமடைந்த கல்லூரி மாணவி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நவீன் என்பவரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.