வேலூர்: சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ்(47), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் வேலூர் அடுத்த கணியம்பாடி கன்னிக்கோயில் பகுதியில் இடம் வாங்கி அதில் ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். அங்கு கடலூரை சேர்ந்த தர்(53) என்பவரை தொழிலாளியாக நியமித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சென்னையை சேர்ந்த இப்ராகிம் மற்றும் அவரது நண்பர்கள் என 3 பேர் கணியம்பாடிக்கு வந்தனர். அவர்கள் காளிதாசிடம் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து காளிதாசை காரில் கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வேலூர் தாலுகா போலீசில் தர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து காரில் கடத்தி சென்றவர்களை தேடினர். அதில் காளிதாசை புதுச்சேரியில் தங்க வைத்திருந்தது ெதரியவந்தது. அவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு மீட்டனர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை தொடர்பாக காளிதாசை அவர்கள் 3 பேரும் கடத்திச்சென்று புதுச்சேரியில் அடைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக தலைமறைவான இப்ராகிம் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.