சென்னை: சென்னை ராயபுரத்தில் ரூ.8 லட்சம் கொள்ளை போனதாக நாடகமாடிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது தமிம், சாதிக், இக்ரம் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் டெபாசிட் செய்ய சென்றபோது கத்தியால் வெட்டி ரூ.8 லட்சத்தை மர்மநபர்கள் பறித்துச்சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. ராயபுரம் காவல் நிலையத்தில் முகமது தமிம் புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.