சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவசர கால சிகிச்சைக்கான வசதிகள், இருதயவியல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் இல்லை. மேலும், வேளச்சேரியை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவ பணிகள் இயக்குநர், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில், சிறுவனின் சிகிச்சை தொடர்பாக 7 நாட்களுக்குள் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.