சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் டிராவல் பேக்குடன் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். போலீசாரின் சோதனையில் டிராவல் பேக்கில் 30 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருளை கடத்த முயன்ற பாலச்சந்திரன், ராம்குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.