சென்னை: சென்னை மாநகரில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன? என்றும் கேள்வி எழுப்பிய நிலையில், ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை நொளம்பூர் அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு என புகார் அளித்த பட்டியல் இனத்தவரை அவமானப்படுத்தியது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி காவல் ஆணையர் விளக்கம் அளித்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகரில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?: ஐகோர்ட் கேள்வி
0