சென்னை: சென்னையில் ஆன்லைன் மூலம் 5 பேரிடம் ரூ.2.71 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை ராமாபுரத்தில் மென்பொறியாளர் சத்தியசீலன் என்பவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.9,000 மோசடி நடைபெற்றுள்ளது. மின் கட்டணம் செலுத்தவில்லை என்று சத்தியசீலனுக்கு வந்த குறுஞ்செய்தியின் லிங்கை கிளிக் செய்த போது பணம் பறிபோனது.