சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் இன்று அதிகாலை மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 60 லட்சம் மதிப்புள்ள 25 சவரன் நகை கொள்ளை அடைத்து சென்றுள்ளனர். வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை சம்பவம் அரங்கேற்றியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் தர்மராஜன் நகர், விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார் மூதாட்டி சாந்தி(60) இவர் தனது மருமகள், மகன், பெண்ணுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை இவர் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் திடீரென சாந்தியை மயக்க மருந்து கொடுத்து கை, கால்களை கட்டி போட்டு அவர் வீட்டில் இருந்த சுமார் 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து புகார் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சி மற்றும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி சாந்தியை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.