சென்னை: சென்னை, நீலகிரி கலெக்டர்கள் உள்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்புகள் வழங்கி தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளராக இருந்த நந்தகோபால், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை ஆணையராகவும், கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளராக இருந்த ராஷ்மிக்
சித்தார்த் ஜகாடே சென்னை மாவட்ட ஆட்சியராகவும், சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும், நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அம்ரித் நில நிர்வாகத் துறையின் இணை ஆணையராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை செயலாளராக இருந்த ஹனிஸ் சப்ராவுக்கு கூடுதலாக தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சித்ரா விஜயனுக்கு கூடுதலாக தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு திட்ட தலைமைச் செயல் அதிகாரியாகவும், தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குராகவும் பணி வழங்கப்பட்டுள்ளது.