சென்னை: சென்னை நந்தனம் சிஐடி நகரில் உள்ள சாலையில் குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு மாத குழந்தை கண்டெடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது, ஒரு வயதான பெண்ணும் அவருடம் இளம்பெண்ணும் வந்து குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது.