சென்னை: சென்னை மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.