சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் மாணவர் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார், வாகனங்கள் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்தனர். இருசக்கர வாகனம், மின்சார இணைப்புப் பெட்டி, பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது கார் அடுத்தடுத்து மோதியது. விபத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேர், கண்டோன்மென்ட் தூய்மை பணியாளர்கள் 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.