சென்னை: சென்னை சூளைமேடு பகுதியில் மசாஜ் செய்யச் சென்ற இளநீர் வியாபாரியை அறைக்குள் அடைத்து தாக்கி 20 சவரன் நகை, ஜிபே மூலம் ரூ.50,000 பணம் பறித்த வழக்கு தொடர்பாக, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ரேகா (60), சைதாப்பேட்டையைச் சேர்ந்த நவீன் (25) இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.2.85 லட்சம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மசாஜ் செய்யச் சென்ற இளநீர் வியாபாரியிடம் நகை பறித்த வழக்கில் இருவர் கைது!!
0