சென்னை: சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் நவாஸ்கான் என்பவரை கத்தியால் வெட்டி ரூ.50 லட்சம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற நவாஸ்கானை 5 பேர் கும்பல் கத்தியால் வெட்டி ரூ.50 லட்சம் பணத்தை பறித்துச் சென்றது. நவாஸ்கான் அளித்த புகாரை அடுத்து வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியால் தாக்கியதில் காயமடைந்த நவாஸ்கான் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.