சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தட சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது வழித்தட விரிவாக்க பனியின் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 -வது வழித்தட விரிவாக்க பணி ரூ.279 கோடியில் நடைபெற உள்ளது.