சென்னை: ஏர் இந்தியா விமான நிறுவனமும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும் இணைந்து சென்னையில் இருந்து ஜம்மு- காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையங்களுக்கு நேரடி இணைப்பு விமானங்களை இயக்க தொடங்கியுள்ளன. அதன்படி, தினமும் காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், காலை 8.50 மணிக்கு டெல்லி செல்லும்.
டெல்லியில் இருந்து காலை 10.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு, பகல் 12.05 மணிக்கு ஜம்மு சென்றடையும். அதேபோல், ஜம்முவில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், மாலை 5.15 மணிக்கு டெல்லி வரும். டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் இரவு 8 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு இரவு 10.50 மணிக்கு வந்து சேரும்.
இதுபோல காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் காலை 8.50 மணிக்கு டெல்லி செல்லும். டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் காலை 10.15 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீநகருக்கு காலை 11.50 மணிக்கு சென்றடையும். ஸ்ரீநகரில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானம் மாலை 3.35 மணிக்கு டெல்லிக்கு வந்து சேரும். டெல்லியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானம் இரவு 8.20 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது.