சென்னை: Polyhose என்ற பல்வேறு வகையான பைப்புகள் தயாரிக்கும் சர்வதேச நிறுவனம் தொடர்புடைய 50 இடங்களில் ஐடி சோதனை நடத்தி வருகிறது. சென்னை கிண்டி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு, அந்நிய முதலீடு தொடர்பாக வருமான வரித்துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.