சென்னை: சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக இன்று 3,313 பேருந்துகள் இயக்கப்படும். தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,213 சிறப்பு பேருந்துகளையும் சேர்த்து 3,313 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.